search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி பேச்சுவார்த்தை"

    • காசாவில் உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை

    அக்டோபர் 7 தாக்குதல் 

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

    பழிக்குப் பழி 

    இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த 43,552 பேரில் 70 சதவீதம் [30,450 பேர்] பேர் பெண்கள் குழந்தைகள் என்று ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

     

    ஹிஸ்புல்லா லெபனான் 

    இதற்கிடையே ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைப்பதாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் 2500 லெபனானியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் தலைநகர் பெய்ரூட் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை துறந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். அண்டை நாடான சிரியாவுக்கு எல்லை வழியாக லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

    ஈரான் சூழல்  

    இதுதவிர்த்து ஈரான் - இஸ்ரேல் மோதலும் முற்றியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதலால் நிலைமை மோசமானது. இதற்கு பதிலடியாக ஈரான் நிலைகள் மீது இஸ்ரேலும் தாக்கியது. அடுத்ததாக ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால் பதற்றம் அதிகரிக்கும். போரை நிறுத்த ஐநா மேற்கொண்ட முயற்சிகள் அமைத்தும் பலனளிக்காமல் போயின. பதிலாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

    கைவிரித்த கத்தார் 

    இந்த சூழலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த பிணை கைதி பரிமாற்ற அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்கா, எகிப்து முன்னெடுப்பில் கத்தார் நாட்டில் வைத்து நடந்து வந்தது. ஆனாலும் இஸ்ரேல் , மற்றும் ஹமாஸ் பிடி கொடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலிருந்து முழுமையாக விலகுவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய எந்த தரப்பினரும் விரும்பவில்லை என விரக்தி தெரிவித்து கத்தார் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஹமாஸ் அதிகம் கத்தாரில் உலாவுவதும், தோஹா நகரில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் கட்டடம் இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் முன்மொழியப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்காததால் அவர்களை கத்தாரில் இருந்து வேலையற்ற அமெரிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இடது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் - கத்தார் தலைவர் - வலது

     

    உறவு

     எனவே ஹமாஸ் அலுவலகத்தை அடுத்த 10 நாட்களில் மூட கத்தார் உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் கத்தார் வெளியுறவுத்துறை அதனை மறுத்து எதற்கு வம்பு என்று அமைதி பேச்சுவார்த்தையிலிருந்தே மொத்தமாக விளங்கியுள்ளது.

    தற்போதைய நிலைமைக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைத்து தரப்பினரும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டினால் மட்டுமே தங்கள் முயற்சியை மீண்டும் தொடர்வோம் என்று கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட நாடாக இருந்த கத்தார் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதாக இருந்த நிலையில் கத்தார் தற்போது கை விரித்துள்ளதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.  கத்தார் இடத்தில் அடுத்ததாக துருக்கி அமைதி பேச்சுவார்த்தை இடமாக அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் . அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கத்தாரின் இந்த முடிவு வெளிவந்துள்ளதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.

    • கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக நடந்தது
    • தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் கிராமத்தில் நாளை (வியாழன்) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பன்னீர் முருகன் கோவிலுக்கு அபிஷேக கலசம் எடுத்துச் செல்லுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீஸ் பாதுகாப்பு டன் திருவிழாவினை நடத்த இரு தரப்பினரிடம் அறிவுறுத்தி எழுத்துமூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், தலைமை யிடத்து துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்

    கடலூர்:

    விருத்தாசலம் வட்டம் மந்தாரக்குப்பத்தில் கடலூர் -விருத்தாசலம் நெடுஞ்சா லையில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருப்பதாக கூறி மந்தாரக்குப்பம் போலீசார் கட்சி அலுவலக த்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அரசை கண்டித்து போரா ட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இதனை யடுத்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கும் கட்சியினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

    விருத்தாசலம் சப்-கலெ க்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீத், மந்தாரக்கு ப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, தேசிய நெடுஞ்சா லை இளநிலை பொறியாளர் செந்தமி ழ்ச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முருகன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் அரசி ன் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா கவும், மேலும் அந்த பகுதியில் போக்குவ ரத்து இடையூறாக ஆக்கிரமி த்துள்ள கடைகளையும் அகற்றுமாறு அதிகாரிக ளிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்தனர்.

    அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை தலீபான்கள் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban
    தோகா:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் தலீபான்களோ கத்தார் தலைநகர் தோகாவில்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டது.

    அதன்படி இருதரப்புக்கும் இடையேயான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. ஆனால் தலீபான்கள் இதில் பங்கேற்க முடியாது எனக்கூறி அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் தலீபான்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமைதி பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்க தலீபான்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #PakistanPM #Imrankhan
    ரியாத்:

    சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை நீட்ட முயற்சித்தேன். அது மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. எனவே இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.

    எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கருதுகிறேன் என்றார்.

    ஐ.நா. சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசுவது என கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இதை தான் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். #PakistanPM #Imrankhan
    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார். #IndiaPakistanTalks #ImranKhan #Modi
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.



    இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபற உள்ள ஐநா பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. #IndiaPakistanTalks #ImranKhan #Modi
    ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர். #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    சனா:

    ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்

    பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் இன்றிரவு செய்தி வெளியிட்டுள்ளன. #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    ×